Monday, December 26, 2011

திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் நண்பர்களுக்கு ......................




பஸ் டிக்கெட் கட்டண உயர்வுக்கு பிறகு சந்தோசமாய் இருப்பது இரயில்வே நிர்வாகம்தான் !!!!!!!!!!!!!!!!!!! ஆம் கூட்டம் பின்னி பெடல் எடுக்கிறது...... அந்த கூட்டத்தில் நானும் ஒருவன் ...................சிலர் ரயிலை மட்டுமே நம்பி இருந்த காலம் மீண்டும் வந்துவிட்டதோ என்று பேசிக்கொண்டிருந்தார்கள் (இரயிலுக்குள்தான்) .........

காரணம் அவ்வளவு கூட்டம் .................இத்தனை நாளை டிக்கெட் கவுண்டர்களில் தூங்கி கொண்டு இருந்தார்கள் (திருச்சியில் இல்லையப்பா).........

இப்ப இவன் என்னதான் சொல்ல வரான் என்று நீங்கள் மனசுக்குள் கேட்பது என் காதில் விழுகிறது ......... மேட்டருக்கு வரேன் ................ இப்பொழுதெல்லாம் நான் எங்கள் ஊருக்கு (தஞ்சைக்கு) இரயிலில் தான் செல்கிறேன் ........... ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்காதீர்கள் !!!!!!!!!!!!! நாலைந்து முறை டிக்கெட் எடுக்க முடியாமல் அடுத்த நிலையத்தில் எடுத்த கதையும் உண்டு ......... எல்லோராலும் அது முடிவதில்லை .........காரணம் இடைப்பட்ட நேரம்.............சில சமயம் இரயிலில் ஏறாமல் அதற்க்கு டாட்டா காட்டியவர்களும் உண்டு (நானும் பாத்திருக்கிறேன்) .......... சில நாள் முன்பு ரயில்வேயின் பதிவு பெற்ற அலுவலகம் என்ற பெயரில் ஒரு போர்டு பார்த்தேன் (ஜங்ஷன் ரவுண்டானா அருகில்) ............

வழக்கம் போல சண்டே ஊருக்கு போகும் போது நண்பனின் அறிவுரையின் பேரில் அந்த கடைக்கு சென்றேன் .............. ஜங்ஷன் டிக்கெட் கவுண்டரில் வழங்கும் முன்பதிவில்லாத அணைத்து டிக்கெட்டுகளும் இங்கும் கொடுக்கிறார்கள் அதுவும் மிகவும் வேகமாக பணியாற்றுகிறார்கள் (வேகமாக என நான் குறிப்பிட காரணம் ஜன்க்சனில் கொஞ்சம் வயதானவர்கள் பணியாற்றுகிறார்கள். அதற்காக அவர்களை பொறுப்பற்றவர்கள் என்றெல்லாம் கூறவில்லை) இளங்கன்று பயமறியாது என்று பெரியோர் சொல்ல கேள்வி பட்டிருக்கிறேன் .................. சிலர் வருந்தும் விஷயம் என்னவென்றால் ஜன்க்சனை விட இங்கு டிக்கெட் ஒரு ரூபாய் அதிகம் ..............அது அவர்கள் கமிசன் போலும் ...............(ஒரு ருபாதான்பா அதிகம்) அவர்களுக்கென்று சம்பளம் ஏதும் இரயில்வே நிர்வாகம் வழங்குவதில்லை என்றுதான் நினைக்கிறேன்..........அந்த ஒரு ரூபாய்களை வைத்துதான் கடை வாடகை, சம்பளம், கரண்ட் பில் போன்றவைகளை எல்லாம் சாமாளிக்கிறார்கள் போலும் ...........(இது ஒன்னும் பிளாக் டிக்கெட் இல்லையப்பா..............) இரயில்வே நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு நிறுவனம் ............... டிக்கெட் எடுக்காமல் சீக்கிரம் வந்தும் டி டி ஆருக்கு பயந்து பிளாட்பாரத்தில் நின்று ரயிலுக்கு டாட்டா காட்டுவதை காட்டிலும், எதோ வீரம் வந்தது போல் (விஜய்க்கு அம்மா செண்டிமெண்ட் வந்து எதிரிகளை அடித்து துவைப்பது போல்) அடுத்த நிலையத்தில் எடுக்கலாம் என நினைத்து ஏறி நமது (ஈழத்தமிழர்கள்,முல்லை பெரியாறு அனை, ராசா போல) போதாத காலம் டி டி ஆரிடம் மாட்டி தண்டம் அழுவதை விட ஒரு ரூபாய் அதிகம் கொடுத்து சன்னல் ஓரத்தில் உட்காந்து கொண்டு போவது எவ்வளவோ மேல் ............. நண்பர்களே ஒரு ரூபாய்தான் அதிகம் நினைவில் வைத்துகொள்ளுங்கள் ........................

அடுத்த பதிவில் சிந்திப்போம்............................


நீ என்னை வெறுத்தாலும் அல்லது
என் நினைவுகளால் தவித்தாலும்
அது எனக்கு மகிழ்ச்சியே, ஏனெனில்
என் நினைவால் தவிக்கும் பொழுது
உன் இதயத்திலும்
என்னை வெறுக்கும் பொழுது
உன் மனதிலும் இருப்பேன் ............
இப்பொழுது நான் இருப்பது
மனதிலா அல்ல இதயத்திலா ????????????

Wednesday, December 14, 2011

அன்பு


எனக்குள் இதயம் இருப்பதை நான் உணர்ந்தது
நீ என் மேல் காட்டிய அன்பை உணர்ந்த போதுதான்!!!!!!!!!!!!

Friday, November 25, 2011

சிறந்த காதல் வரிகள்

கண்ணில் கண்டவளை பற்றி காகிதத்தில் எழுதுவதல்ல காதல்
மனதில் பதிந்தவளை கண்ணீரில் எழுதுவதுதான் காதல்

கண்ணாடி....


நான் நீ முகம் பார்க்கும் கண்ணாடி போல சிறந்த நண்பன் .
ஏனெனில் நீ அழும் போது ஒரு போதும் நான் சிரிக்க மாட்டேன்

Friday, November 4, 2011

நினைவு...........


புயல் கடந்து சென்ற தடமும்,
நீ வந்து போன நினைவும்
ஒரே உணர்வையே தருகிறது........

Wednesday, October 12, 2011

தனிமை



என் தனிமை என்பது
யாரும் இல்லாத பொழுதுகள் அல்ல........
நீ என்னுடன் இல்லாத பொழுதுகளே.............................

காதல்



முதல் காதல் பெரும்பாலும்
தோல்வியயே தரும்........
ஆனால், அதுதான் காதல் என்றால்
என்னவென்று கற்றுத்தறும்.........
காதலை பற்றி தெரிந்த பின்
மீண்டும் காதலிக்க தோன்றாது................

Monday, October 3, 2011

வலி............



கேள்விகள் வலிக்கும் இருவருக்கும்............
வலிக்கச் செய்வது காதலாகாது....................
புரிந்து கொள்வதும் ஏற்றுக்கொள்வதுமே காதல்.....................
ஏற்றுக் கொள்வது என்றால் முழுமையாக.................
முன் நடந்த சம்பவங்களையும் சேர்த்துதான்.....................
அது காதலில் முடியும்..........
காதலால் மட்டுமே முடியும்.............

Tuesday, September 20, 2011

சினிமா பாடல் ஜோக்ஸ்,,,,,,,,,

1.நான் பாடும் மவுன ராகம் கேட்க வில்லையா?– பாடல் வரி

மவுன ராகம் எப்படிடா கேக்கும்

2.ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு– பாடல் வரி

அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா

3.உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா?– பாடல் வரி

உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா?

4.வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்– பாடல் வரி

முதல்ல ரோட்டை பார்த்து போடா டேய்..போய் சேந்துர போற!!!

5.என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா?– பாடல் வரி

அங்க உயிர் போய்டுச்சுன்னு கத்துறாங்க …உனக்க இங்க பாட்டு
கேட்க்குதா..ஓடி போயிடு…

6.நலம் நலமறிய ஆவல்!–பாடல் வரி

இப்படிக்கு முனுசாமி

7.அதாண்டா இதாண்டா அருனாச்சலம் நாதாண்டா–பாடல் வரி

சார்,கொஞ்சம் மரியாதையா பேசுங்க!!!

8.மழை வருது மழை வருது குடை கொண்டு வா—பாடல் வரி

யோவ் யாருய்யா ..அது வானிலை அறிவிப்பாளர ஹீரோவா போட்டது??

9.காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்—பாடல் வரி

அறிவே கிடையாதா? தலை கீழா உட்கார்ந்தா எழுதுவே?

10.இரவா பகலா நிலவா—பாடல் வரி

கண்ணாடிய போடுங்க முதல்ல!!

11.ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ—பாடல் வரி

நம்ம வானிலை அறிக்கையை நம்புனாலே இப்படித்தான்!!!


12.அவள் பறந்து போனாலே—பாடல் வரி

அதுக்கென்ன பண்றது வந்தவன் அமெரிக்கா மாப்பிள்ளை ஆச்சே!!

Thursday, September 8, 2011

தலையணை கண்ணீர் .........- படித்ததில் பிடித்தது .................



ப்போதெல்லாம் தனிமை வலிக்கவில்லை
இந்த நாட்களில் நீயில்லாமல்
வாழ பழகி கொண்டுவிட்டேன்
உன் நினைவுகள்இல்லாமல் தான்
வாழ முடியவில்லை...

கடந்து போன வாழ்க்கையை
நினைத்து பார்ப்பதா
இல்லை உன்னுடன்
வாழ நினைத்த வாழ்க்கையை
கனவாய் காண்பதா என்று யோசித்து
முடிப்பதற்குள் விடிந்துவிடுகின்றன
என் இரவுகள்...

ஏன் என்று தெரியாமலே
அழுது தலையணைகள்
நனைகிறது என் இரவுகளில்...

ஒரே நகைச்சுவைக்கு
பலமுறை சிரிக்க
இயலாதபோது ஒரே துயரத்திற்கு
பலமுறை கண்ணீர் வடிப்பது
ஏனோ எனக்கு புரியவில்லை...


அடுத்த நாள் வழக்கம்போல
துவங்குகிறது... இயந்திரமாய்
நகரும் வாழ்க்கையில்
இன்றாவது எதிர்பார்க்கிறேன்
உன்னையும் உண்மையாய்
சிர்ப்பதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும்,
கிடைக்காது என்று தெரிந்திருந்தும்...

Saturday, September 3, 2011

தாய்



கருவறையில் சுமந்து காயம் பல அடைந்து
மாதம் பத்து சென்று பக்குவமாய் பெற்றெடுத்தாய்
அப்பச்சிளம் குழந்தையை பத்தியம் பல இருந்து
பாதுகாத்து வளர்த்து தொட்டிலில் தூக்கிபோட்டு
தாலாட்டுப் பாட்டு பாடி துங்கவைத்து ,
பாசத்தை அள்ளிதந்து பள்ளிக்கு அணுப்பி
பாதை பார்த்து அமர வேண்டும்,
உன்னுயிர் தந்து அப்பெண்ணுயிர் காத்த உன்னை,
முதுமை வந்தாலும் முகம்மது நபி அவர்கள்
உறைத்தது போல் அக்குழந்தை தேடுமம்மா
தாயுனது காலடி கவனத்தை...........

Monday, August 29, 2011

நீ .................... நான் ......................



தேடி பார்க்க நான் உன்னை தொலைக்கவும் இல்லை ,
விலாசம் கேட்க நான் உன்னை மறக்கவும் இல்லை,
நலம் விசாரிக்க காலம் நம்மை பிரிக்கவும் இல்லை,
என்றும் உன் நினைவில் நான் ....................

Monday, August 22, 2011

படித்ததில் பிடித்தது.................

சட்டங்களும் நஷ்டங்களும்

காலங்கார்த்தாலே போலீஸிடம் மாட்டுவேன் என்று கொஞ்சம் கூட நினைக்கவில்லை.

அன்று காலையில் கிளம்பும் போதே பயங்கர லேட்டாய்த்தான் கிளம்பினேன். பைக்கில் பறந்தடித்துச் சென்றாலும் கவுண்டம் பாளையத்திலிருந்து சரவணம் பட்டிக்கு இருபது நிமிடம் ஆகும். ஒன்பது மணிக்குள் கண்டிப்பாய் கார்ட் பஞ்ச் பண்ண முடியாது என்று தெரிந்தும், ஒரு சான்ஸ் பார்க்கலாம் என்று வேகமாய்ப் பறந்து கொண்டிருந்தேன். ஜி.என்.மில்ஸ் தாண்டி ரயில்வே க்ராஸிங் தாண்டும் போது பள்ளிக்கூட யூனிஃபார்மில் இருந்த இரண்டு சிறுவர்கள் லிஃப்ட் கேட்டுக் கையை நீட்டினார்கள்.

நிற்க நேரமில்லாமல் வேகவேகமாய்ப் போய்க் கொண்டிருந்த நான், பள்ளிச் சிறுவர்கள் என்றதும் பிரேக்கை மிதித்தேன். பார்த்ததுமே தெரிந்தது. அண்ணன்-தம்பி… அண்ணன் ஏழாம் கிளாஸும் தம்பி ஆறாம் கிளாஸும் படிக்கிறார்களாம்.

பள்ளிக்கூடம் செல்ல வேண்டிய பஸ்ஸை மிஸ் செய்து விட்டதாலும், மிக லேட்டாகி விட்டதாலும் கொஞ்சம் அவசரமாய் வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விட்டால் போதும் என கெஞ்சும் நிலையில் கேட்டுக் கொள்ளவே பைக்கில் இருவரையும் உட்காரச் சொல்லி திராட்டிலைத் திருகினேன்.

மூன்று நிமிடம் இருக்கும். அடுத்த க்ராஸிங்கைக் கடக்கும் சமயத்தில் அந்த ட்ராஃபிக் போலீஸ் ஸ்குவாட் விசிலடித்துக் கூப்பிட்டதை சத்தியமாய் நான் கவனிக்கவில்லை. அடுத்த இரண்டாவது நிமிடம் ஒரு கான்ஸ்டபிள் எங்களை விரட்டி மடக்கி வண்டிச் சாவியைப் பறித்தபோது, அரை கிலோமீட்டர் தாண்டியிருந்தேன். “வண்டியைத் தள்ளிட்டு வாப்பா. இன்ஸ்பெக்டர் கூப்பிட்டாரு. மூணு பேரும் வாங்க..!” சொல்லியபடியே தான் வந்த வண்டியைத் திருப்பினார் கான்ஸ்டபிள்.

கடுப்புடன் திரும்பி நான் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, “ஸாரிண்ணா..!” என்று சங்கடத்துடன் தலையைக் குனிந்தபடி வந்தாலும், சிறுவர்களின் முகத்தில் பள்ளிக்கு லேட்டாவதின் பயம் தெரிந்தது.

வண்டியைத் தள்ளியபடி அந்த இன்ஸ்பெக்டர் இருந்த இடத்திற்கு வர கால் மணி நேரம் ஆகிவிட்டது. ஒரு டெர்ரரிஸ்ட்டைப் பிடித்த பெருமையுடன் என்னைப் பார்த்த இன்ஸ்பெக்டர் ரொம்பக் கறாராய்,

“ட்ரிபிள்ஸ். நிக்காமப் போனா விட்டுடுவமா.? பீக் அவர்ஸ். முந்நூற்றைம்பது ரூபாய் ஃபைன். நிக்காம போனதுக்கு ஒரு இருநூத்தைம்பது. ஆக மொத்தம் அறு நூறு எடுப்பா..!”.

ஒரு உதவி செய்யப் போய் அலுவலகத்துக்கு லேட்டாவதுடன், அறுநூறு ரூபாய் தண்டம் வேறு. நான் திரும்பி கோபமாய் அந்தச் சிறுவர்களைப் பார்க்க, அதில் பெரியவன் தைரியமாய் அந்த இன்ஸ்பெக்டரிடம் பேச ஆரம்பித்தான்.

“சார் இந்த அண்ணன் மேல ஒண்ணும் தப்பு இல்ல சார்… நாங்கதான்.! அதோ அங்கதான் சார் லிஃப்ட் கேட்டோம். பாவம் சார் இந்த அண்ணன்.. விட்டுங்க. ஸ்கூலுக்கு வேற லேட்டாகுது சார்..!”.

அந்த இன்ஸ்பெக்டர் திரும்பி, “தம்பி சும்மா இரு. ஃபைன வண்டிய ஓட்டினவங்கதான் கட்டப் போறாங்க. உனக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல.!” என்று சொல்லிவிட்டு எனக்கு முன்னால் இருந்தவர்களுக்கு ஃபைன் ஷீட் எழுதுகிறேன் என்று வசூலைத் தொடர்ந்தார். “இல்ல சார். அந்த அண்ணன் மேல தப்பு ஒண்ணுமில்ல..” அந்தச் சிறுவன் மறுபடி துவங்க, கடுப்புடன் திரும்பிய இன்ஸ்பெக்டர் கத்தினார். “நிறுத்துடா நாயே.! யார் மேல தப்புனு சொல்லற அளவுக்கு பெரிய புடுங்கியாடா நீயி.? வாய மூடிக்கிட்டு நில்லு. ஏதாவது சொல்லிடப்போறேன்.!”.

அத்தனை பேர் முன்னால் அவமானப்பட்ட வலியுடன் கண்கள் கலங்க அவன் திரும்பி என்னைப் பார்க்க, நான் அவனை ஏதும் பேச வேண்டாம் என சைகை செய்துவிட்டுக் காத்திருந்தேன். அதற்கப்புறம், மேலும் பத்து நிமிடம். இருநூறு ரூபாயில் பேரம் முடிந்து. அதே சிறுவர்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு, இனி வாழ்க்கையில் எவனுக்கும் லிஃப்ட் கொடுப்பதில்லை என்ற முடிவுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.

இந்தப் பதிவின் நோக்கம் ட்ரிபிள்ஸ் போகாதே, போலீஸ் ஊழல், உதவி செய்யாதே என்று எதுவும் சொல்வது அல்ல. ஐந்தாவது நிமிடம் அந்தச் சிறுவர்களை வெள்ளக் கிணறு பிரிவில் இறக்கி விடும்போது நடந்ததுதான் நான் சொல்ல வந்தது.

வண்டியை விட்டு இறங்கியதும், “பார்த்து போங்கப்பா..!” என்று சொல்லிவிட்டு ஆக்ஸிலரேட்டரை முறுக்க எத்தனித்த போது அந்த ஏழாம் வகுப்புப் பெரியவன் கூப்பிட்டான்.

“அண்ணா..!”

“என்ன.?” என்பது போல் நான் திரும்பிப் பார்த்ததும் அவன் தொடர்ந்தான்.

“சாரிண்ணா… இப்பிடி ஆகும்னு தெரியலைண்ணா. எங்களால உங்களுக்கு இருநூறு ரூபா நஷ்டம். அண்ணா… எங்கிட்ட அவ்வளவு பணம் இல்ல. நாங்க ஸ்கூலுக்கு வந்திட்டு போக எங்க அப்பா கொடுத்த இருபது ரூபா இருக்குண்ணா. இத நீங்க வாங்கிக்கணும்..!” என்றவன் நீட்டிய கையில் இரண்டு பத்து ரூபாய்த் தாள்கள் காற்றில் படபடத்துக் கொண்டிருந்தன.

Monday, August 15, 2011

இன்றிலிருந்து என் காதலுக்கு நான்கு வயது ஆரம்பம் ..............

Wednesday, August 3, 2011

ஆறுதல்.............



என் காதலை மறுத்து
என்னை காயப்படுத்தினாலும்
அவ்வப்போது மருந்து போடுகிறது
உன் பார்வை.............

இரு பொருள் தரும் கவிதை



உன் கண்கள் இரு பொருள்
தரும் கவிதை என்பேன்
அது எனக்கு ஜனனமும் மரணமும்
தருவதால்.............

ஒரு பொய் ஒரு மெய்



உனக்காக ஒரு பொய் :
"காதல்" இது உயிர்மெய் எழுத்துகள் அல்ல
இரு உயிர்களின் மெய் எழுத்துகள்.
ஊருக்காக ஒரு மெய் :
ஆயிரம் கவலைகளில்
ஆயிரதோரவது கவலை
காதல்

ச்ச்சும்மா.......



இப்பொழுதும் இனிமையாக இருக்கிறது...........
எப்போதோ எழுதி கிறுக்கிய
என் பழைய நோட்டு புத்தக்த்திற்குள் உன் பெயர் !!!!!!

Thursday, July 28, 2011

படித்ததில் பிடித்தது...............

biryani “தேவையில்லாம அலையப் போறே, உன் இஷ்டம்” என்ற ரவியை பார்த்து “வேஸ்ட் செய்யறது எனக்கு பிடிக்காதுடா.. இதே நேரத்தில...” என்று ஆரம்பித்தவுடன்.. “என்ன.. இதே நேரத்தில எத்தனை பேருக்கு சாப்பிட ஒரு வாய் கூட கிடைக்காம கஷ்டப்படுறாங்க தெரியுமா அதானே.. ஓகே.. ரைட், உன் பாடு அந்த சாப்பாட்டு பாடு.” என்று வண்டியை கிளப்பிக் கொண்டு போய்விட்டான்.

ரவியும் நானும் நெருங்கிய நண்பர்கள். மாசத்திற்கு ஒரு முறை சம்பளம் வாங்கிய முதல் வாரத்தில் ஏதாவது ஒரு ஹோட்டலை தேர்ந்தெடுத்து, மதிய சாப்பாட்டை ஒரு கட்டு கட்டுவது எங்களது வழக்கம். அப்படி சாப்பிட வந்த ஹோட்டலில் கோதுமை பரோட்டா மிகப் பிரபலம். ஆளுக்கு நாலு பரோட்டா, சிக்கன் சைட் டிஷ் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு, இன்னும் கொஞ்சம் வயிற்றில் இடம் இருக்கும் போல இருந்த்தால் ஆளுக்கொரு மட்டன் பிரியாணியை ஆர்டர் செய்தோம். நான் ஒன்று போதும் என்று சொன்ன போது “பரவாயில்ல.. நல்லா சாப்பிடுடா” என்றான். ஒரு கால் ப்ளேட் கூட சாப்பிட்டிருக்க மாட்டோம். பிரியாணி அருமையாய் இருந்தும் சாப்பிட முடியவில்லை. வயிறு ஃபுல். ரவி சாப்பாட்டை அப்படியே வைத்துவிட்டு எழுந்துவிட்டான். எனக்கு மனசே ஆறவில்லை. இந்த ஒரு வேளை சாப்பாடு கிடைக்காமல் எவ்வளவோ பேர் அலைகிறார்கள். நாம் காசைக் கொடுத்துவிட்டு இப்படி வீணாக்குவது அநியாயம் என்று தோன்றியது. சர்வரை கூப்பிட்டு என்னுடயதையும் சேர்த்து பார்சல் செய்து தரச் சொன்னேன். என்னால் இந்த பார்சலை வீட்டிற்கு கொண்டு போக முடியாது. ஏன் என்றால் எங்கள் வீட்டில் சுத்த சைவம். அதனால் தான் ரவி அப்படிச் சொன்னான் “தேவையில்லாமல் அலையப் போறே” என்று.

ஒரு சாப்பாட்டு பார்சலை கொடுக்க ஒரு பிச்சைக்காரர்கள் கூடவா இருக்க மாட்டார்கள்? என்று யோசித்தபடி வண்டியை கிளப்பினேன். காற்றில் பார்சல் பிரியாணியின் வாசம் மூக்கை துளைத்தது. ஒரு நல்ல பிரியாணியை யாரோ ஒருவர் சாப்பிடப் போகிறான் என்று நினைத்தபடி வண்டியை மெல்ல ஓட்டியபடி சுற்றிலும் யாராவது தென்படுகிறார்களா? என்று பார்த்தபடி சென்றேன்.

எனக்கு பிச்சை போடுவது பிடிக்காது. ஆனால் பசி என்று யாராவது பிச்சைக் கேட்டால் அவர்களை கூட்டிக் கொண்டு போய் சாப்பாடு வாங்கி தந்துவிடுவேன். அவர்கள் சாப்பிடும் வரை காத்திருந்து பார்த்துவிட்டுத்தான் கிளம்புவேன். ஏனென்றால் ஒரு முறை ஒரு வயதான கிழவி பசி என்று பிச்சையெடுக்க பக்கதிலிருந்த ஒரு கடையில் எலுமிச்சை சாத பாக்கெட் ஒன்றை வாங்கி கொடுத்துவிட்டு, பக்கத்தில் இருந்த ஒரு இட்த்திற்கு போய் வரும் போது கிழவி அந்த டிபன் கடையில் நின்று கொண்டிருந்தாள். அருகே போய் என்ன செய்கிறாள் என்று பார்த்த போது அந்த பொட்டலத்தை கொடுத்துவிட்டு காசு வாங்கிக் கொண்டிருந்தாள். அன்றிலிருந்து சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் கூட இருந்து சாப்பிடுவதை பார்த்த பின் தான் நடையை கட்டுவேன். இப்படி செய்பவர்களைப் பார்த்தால் கோபம் கூட வருவதுண்டு. கொஞ்சம் யோசித்த பின் சரி பரிதாப்படுகிறவர்கள் அத்தனை பேரும் என் போல சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் அவர்களும் எவ்வளவுதான் சாப்பிடுவார்கள் என்று சமாதானப் படுத்திக் கொண்டாலும், நான் சாப்பாடு வாங்கிக் கொடுத்தால் சாப்பிடுபவர்களுக்கு மட்டும்தான் என் தயாள குணமெல்லாம்.

சில சமயம் இம்மாதிரியான பிச்சைக்காரர்களிடம் காசு கிடையாது, சாப்பாடு மட்டும்தான் என்று சொன்னால் ஏதும் பேசாமல் அடுத்த ஆளை பார்க்க போய் விடுபவர்களையும் பார்த்திருக்கிறேன். பிச்சையெடுப்பவர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம். சில பேர் பார்க்க டீஸெண்டாய் இருந்து கொண்டு “சார்.. ஒரு பத்து ரூபாய் ஹெல்ப் செய்ய முடியுமா?” என்று ஸ்டைலான ஆங்கிலத்தில் ஸ்பென்ஸர் ப்ளாசாவின் வாசலில் பிச்சையெடுத்ததையும் நான் பார்த்திருக்கிறேன்.

யோசித்துக் கொண்டே சுற்றிலும் பார்த்துக் கொண்டு வந்த்தில் சாப்பாடு கொடுக்க கூடிய அளவில் யாரையும் கண்ணில் காணவில்லை. அசோக்பில்லர் சிக்னலின் ஓரமாய் வண்டியை நிறுத்தி காத்திருந்தேன் வழக்கமாய் அடிக்கடி சிக்னலில் வடநாட்டு அழுக்கு பெண்கள் முதுகில் குழந்தைகளோடு அங்கு பிச்சையெடுப்பதை பார்த்திருக்கிறேன். கால் மணி நேரம் நின்றதுதான் மிச்சம் ஒருத்தரையும் காணவில்லை. சரி.. சரவண பவன் பக்கம் போய் பார்ப்போம். அங்கே ஸ்கூல் வாசலில் சில பேர் இருப்பார்கள் என்று அங்கே போய் கொஞ்ச நேரம் நின்றேன். ரோடு முழுவதும் மரங்களாய் இருந்த்தால் நிற்கும் கஷ்டம் தெரியவில்லை. ரோடே வெறிச்சோடியிருந்த்து. சரவண பவன் வாசலில் மட்டும் கொஞ்சம் ஆள் நடமாட்டமிருக்க, வெற்றுப் பார்வை பார்த்தபடி வண்டியின் மேல் உட்கார்ந்தேன். அப்போது பக்கத்திலிருந்த ஒரு தெருவிலிருந்து ஒருவன் கலைந்த தலையோடு, அவனுடய ஒல்லியான தேகத்திற்கு கொஞ்சம் கூட சம்மந்தமில்லாத ஒரு பெரிய அழுக்கு நீல சட்டையை, பொத்தான்களை மாற்றி போட்டுக் கொண்டு, மேலும் அழுக்கான லுங்கியோடு அங்கும் இங்கும் பார்த்தபடி வர, அவனைப் பார்த்த்தும் இவன் தான் சரியான ஆள் என்று முடிவு செய்து, அவன் அருகில் போய் “தம்பி... சாப்பாடு இருக்கு.. பிரியாணி.. சாப்பிடுறீங்களா?” என்று பார்சனை அவன் முகத்திற்கு நேராய் நீட்டிய அடுத்த விநாடி, அவன் முகம் மாறி... ‘யோவ்.. நான் உன்னை சாப்பாடு கேட்டேனா? இல்ல என்னப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரியிருக்கா? த்தா.. கிளம்பி வந்திடறானுங்க. பெரிய லார்டு லபக்குதாஸ் மாதிரி... அதென்னா மூக்குக்கு முன்னாடி பிரியாணி பொட்டலத்தை காட்டி பேசுறே.. நானெல்லாம் பிரியாணி சாப்பிட்ட்தேயில்லியா? நான் யார் தெரியுமா? அதோ அங்க வீடு கட்டுறாய்ங்க இல்ல அங்க வேலை செய்யுறேன். அழுக்கா ஆளிருந்தா பிச்சை போட்டுருவீங்களோ?” என்று திட்டியபடி போய்விட்டான்.

நமக்கு ஏன் இப்படி நடக்குது? பேசாமல் ரவி சொன்னா மாதிரி ஹோட்டல்லயே விட்டுட்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. ஏதோ பெரிய தர்ம்ம் செய்வதாய் நினைத்துக் கொண்டு சாப்பிட்ட சாப்பாட்டிற்கு வீட்டிற்கு போய் ஒரு குட்டி தூக்கம் போட்டிருக்கலாம். தேவையில்லாமல் கண்டவனிடம் திட்டு வாங்கிக் கொண்டிருக்கிறேன்.

”என்ன தம்பி பிரச்சனை?” என்ற குரல் வந்த திசையை பார்த்தேன் . அருகில் இருந்த ப்ளாட்டின் வாட்ச்மேன். நடந்ததை சொன்னேன். “ஓ.. சரி விடுங்க நான் சாப்பிடுறேன்” என்றதும் சட்டென சந்தோஷம் வந்தது. அப்பாடி ஒரு வழியாய் சாப்பாடு வீணாகவில்லை. “இந்தாங்க.. பிலால் கடை பிரியாணி” என்று சொல்லிக் கொடுத்தேன். வாட்ச்மேன் நெருப்பை தொட்டது போல “அய்யோ.. பிரியாணியா.. நான் சுத்த சைவங்க..நல்ல வேலை சொன்னீங்க” என்று விதிர்த்துப் போய் விலகி நின்றார். என்ன சோதனைடா.. என்று என்னையே மனதுக்குள் திட்டியபடி, வண்டியை கிளப்பினேன். அருகில் ஆஞ்சநேயர் கோயில் இருக்கு அங்கே சில பிச்சைக்கார்ர்களை பார்த்திருக்கிறேன். அங்கே போய் பார்கலாம் என்று போன போது கோயில் நாலு மணிக்குத்தான் திறப்பார்கள் என்பதால் வாசலில் யாருமில்லை.

நாட்டில் பிச்சைக்காரர்களே இல்லாமல் போய்விட்டார்களா? எல்லோரும் சுபிட்சமாய் இருக்கிறார்களா? என்று என்னையே கேட்டுக் கொண்டேன். சைதாப்பேட்டை காரணீஸ்வர்ர் கோயில் வாசலில் நிரந்தரமாய் இரண்டு மூன்று தொழு நோயாளி பிச்சைக்காரர்களை பார்த்திருக்கிற ஞாபகம் வர, உடனே வண்டியை சைதாப்பேட்டைக்கு விட்டேன். வாசலில் வயதான பூக்காரி மட்டுமேயிருந்தாள்.

“என்னா தம்பி?”

“இல்ல இங்க ரெண்டு தொழு நோயாளி பிச்சைக்காரங்க இருந்தாங்க இல்ல அவங்க இல்லையா?’ என்றேன்.

“ஓ.. அவங்களா.. உடம்புக்கு ரொம்ப முடியாம ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க” என்றாள். கொஞ்சம் வெறுப்பாய் கூட வந்தது. சாப்பாடு வீணாக்க்கூடாது என்கிற ஒரு கொள்கைக்காக இவ்வளவு தூரம் நேரம், எல்லாவற்றையும் வேஸ்ட் செய்ய வேண்டுமா? என்ற கேள்வி எனக்குள் ஓடியது. பேசாமல் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு போய்விடுவோமா? என்ற யோசனை வந்து குப்பைத் தொட்டியை நோக்கி வண்டியை விட்டேன். குப்பைத் தொட்டியில் போடுவதற்கு மனமேயில்லை. கொஞ்சம் கொள்கையில் தோற்று விட்டோமே என்ற வருத்த்த்தில் கண் கலங்கக் கூட செய்தது. பக்கத்திலிருந்த ஒரு பிரியாணிக் கடையிலிருந்து அண்டாவில் “டன்..டன்’ என கரண்டியால் தட்டும் சத்தம் கேட்டது. மிகப் பிரபலமான பிரியாணிக்கடை. மக்கள் கடையின் வாசலில் க்யு கட்டாத குறையாய் அன்றோடு பிரியாணி கிடைக்கவே கிடைக்காது என்பது போல ஆலாய் பறந்து கொண்டிருக்க, அந்த கூட்ட்த்திலிருந்து இரண்டு சிறுவர்கள், கால்களின் இடுக்குகளிலிருந்து வெளியே வந்தார்கள்.

பையனுக்கு ஒரு பத்து வயதிருக்கும், இன்னொரு பெண் குழந்தை நான்கைந்து வயதிருக்கும். அழுது கொண்டே வந்தாள். “த.. அளுவாத.. அடுத்த வாரம் வாங்கித் தரேன். இவனுங்க திடீர்னு விலையேத்திருவானுங்கன்னு எனக்கென்ன சோசியமா தெரியும்?” என்று சமாதானப் படுத்திக் கொண்டிருக்க, அவளோ விடாமல் கைகால் உதைத்து நடு ரோடென்றும் பாராமல் புரண்டு அழ, அவன் செய்வதறியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, நான் அவனருகில் சென்று “தம்பி.. பாப்பாவுக்கு என்ன பிரியாணிதானே வேணும். நான் தர்றேன். என் ப்ரெண்டுக்காக வாங்கினேன். அவரு வேணாம்னுட்டாரு.. இந்தா எடுத்துக்க” என்று அவனிடம் நீட்டினேன். கொஞ்சம் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக, கை நீட்டி வாங்கிக் கொண்டான். “யேய்.. சீதேவி.. தபாரு.. பிரியாணி இந்தா வா சாப்புடலாம்” என்று அவளிடம் காட்டிய பிறகு அவள் முகமெல்லாம் பல்லாய் கண்களில் நீருடன், ரோட்டின் புழுதியிலிருந்து ஆவலாய் கை நீட்ட, “த.. சீ.. போய் கை கழுவினு வா..” என்று அருகில் இருந்த தெருக்குழாயை காட்ட, அவளைவிட பெரிதாய் இருந்த பைப்பின் கைப்பிடியை பிடித்து தொங்கியபடி பைப்பை அடிக்க, தண்ணீர் வந்த்து ஓடிப் போய் கையை கழுவிக் கொண்டே எங்களையும் பார்த்து சிரித்தாள். நான் கிளம்ப எத்தனித்த போது “சார்... இந்தாங்க” என்று அவனுடய ட்ராயர் பாக்கெட்டிலிருந்து பத்து ரூபாய் நோட்டாய் ஒரு கொத்தை கொடுத்து, “இதில எழுபது ரூபாய் இருக்கு. பத்து ரூபாய் இல்லைன்னுதான் திரும்ப வந்திட்டேன். நாளைக்கு இந்த கடையாண்ட வந்தீஙக்ன்னா கொடுத்திடறேன். தங்கச்சி ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்திச்சு. அதுக்காக சேர்த்து வச்சு வாங்கலாம்னு வந்தேன்” என்று என் கையில் காசை வைத்துவிட்டு கடையின் ஓரத்தில் வைத்திருந்த குப்பை பொறுக்கும் பையை முதுகில் மாட்டியபடி, இன்னொரு கையில் பிரியாணியையும், தங்கையையும் ஒரு சேர கைபிடித்து அழைத்துக் கொண்டு போனான். கையில் இருந்த கசங்கிய பத்து ரூபாய் நோட்டுக்களை எண்ணத் தோன்றாமல் நிறைவாயிருந்தது மனது. சாப்பாடு வேஸ்டாகவில்லை.

Sunday, July 17, 2011

கண்ணொரு எழுத்தாணி..............



இரண்டு கைகளால் எழுதத்தெரிந்தவர்
மகாத்மா காந்தி.................
இரண்டு கண்களால் எழுதத்தெரிந்தவள் என்
மகத்தான காதலி................

அழகு...........



மீன்களுக்கு கழுத்து கிடையாது....................
மலேய மொழிக்கு எழுத்து கிடையாது..............
உன் அழகுக்கு அடுத்து கிடையாது...........................

இரண்டாவது நிலா...........


நாசாவிற்கு முன் நான் கண்டுபிடித்துவிட்டேன்,
செவ்வாய் கிரகத்திற்கு அடுத்து நம் பூமிக்கும் இரண்டு
நிலா கிடைத்துவிட்டது நீ பூமியில் பிறந்தவுடன்..........

Tuesday, July 12, 2011

படித்ததில் பிடித்தது ......


கடவுளிடம் பிராத்தனை செய்வதற்கும்
பெண்களிடம் காதலை சொல்வதற்கும்
இன்னும் சரியான மொழி கண்டறியப்படவில்லை ................

கடவுளின் தவறுகள் ??????


காதல் என்பது கடவுளால் உண்டான
இரண்டாவது தவறு ,ஆமாம்!!!!!!!!!!!!!
பெண்களே முதல் தவறு ......ஆனால்
இரண்டுமே அழகான தவறுகள் !!!!!!!!!

Wednesday, June 29, 2011



வார்த்தை தடுமாற காரணம் "கண்கள்"

வாழ்கை தடுமாற காரணம் “பெண்கள் "…

ஜாக்கிரதை ...................

Tuesday, June 28, 2011


கண்கள் செய்யும் சிறு தவறுக்கு இதயம் அனுபவிக்கும் ஆயுள் தண்டனை .
"காதல்"

Monday, June 20, 2011

பொண்ணுங்களுக்கும் பையன்களுக்கும் உள்ள வித்தியாசம்


பெண்கள் -இவங்க காதலிச்சா இவங்களை
தவிர வேற யாருக்கும் தெரியாது ............
ஆண்கள் - இவங்க காதலிச்சா அந்த
பொண்ண தவிர மீதி எல்லாருக்கும் தெரியும் ..............
பின்பு பொண்ணுங்க கல்யாணத்துக்கு
பத்திரிக்கை அடிக்கிறாங்க !!!!!!!!!!!!!!!!
பையனுக சாகரதுக்காக
தண்ணி அடிக்கிறானுக ............... இவ்ளோதான் வித்தியாசம் ......................

Sunday, June 19, 2011

ச்ச்சும்மா ......................


பேருந்து பயணங்களில் பின்னோக்கியே
பயணம் செய்கிறது என் மணம் !!!!!!!!!!!!
கடைசி சீட்டில் நீ .....

முள்ளும் மலரும்



என் மீதுள்ள கோபத்தில்
நீ பூக்களையும் வெறுக்கிறாய் ........................
உன் மேல் உள்ள காதலில்
நான் முட்களையும் நேசிக்கிறேன் .............

நம்பிக்கை!!!!!!!!!!!!!!!!!!!!



முடிவே இல்லாத பாதையில் பயணம் செய்கிறேன் ..........
முடிவில் நீ இருப்பாய் என்ற நம்பிக்கையில் .........................

Tuesday, June 14, 2011











காதலர்களின் காலடிச் சுவடுகளை
அழித்து விளையாட கரைக்கு
அடிக்கடி வருகிறது கடலலை ஏன்?
அதற்க்கு காதல் பிடிப்பதில்லையா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

Friday, June 10, 2011












நமக்கு முன்னும் பின்னும் செல்ல வாய்ப்பளித்த இறைவனுக்கு
ஏன் நாம் விட்டு சென்ற காலங்களை
பின்னே சென்று காண வாய்ப்பளிக்கவில்லை ?????? வாழக்கையில் / காதலில்
அவன் வெற்றி
பெற்று விட்டான் போலும் !!!!!!!!!!!!!
ஒரு வேளை தோற்றிருந்தால்
அவன் செய்த தவறுகளை கடந்த காலங்களில் சென்று மாற்றி இருப்பான் !!!!!!!!! அதிர்ஷ்டசாலி .................

Tuesday, May 31, 2011

உன்னை பிரிந்த வலியை விட ,.......................
அதை மறைத்து சிரிப்பது மரணத்தை விட கொடியது .....................

Saturday, May 21, 2011















வாங்கியதை திருப்பி தரமாட்டேன் !!!!!!!!!!!!!!!!!! என்று
நானும் சொன்னேன் ................
நீயும் சொன்னாய் ....................
ஆம் இருவருக்கும் இழப்புதான் ................
நான் சொன்னது இதயத்தை ..............
நீ சொன்னது முத்தத்தை ..............................

Sunday, April 24, 2011


















தினமும்
என்னை தூங்க வைப்பது உன் கனவுதான்...................,
அதி காலை என்னை எழுப்புவதும் உன் கனவுதான்...................

















நீ
வந்த கனவுகளில் எனக்கு மிகவும் பிடித்தது எது தெரியுமா???????
நீயும் நானும் கடற்கரையில் அமர்ந்து
பேசிக்கொண்டிருக்கையில்
உனது மொத்த குடும்பமே வந்து
பேசியது
போதும் வா வீட்டுக்கு போகலாம்
என்று
கூபிட்டதே அந்த கனவுதான் !!!!!!!!!!!!!!!!











தட்டி
கொடுத்து தூங்க வைக்கும் தாய் போல
எனக்கு
கனவை கொடுத்து தூங்க வைக்கும்
நீயும்
எனக்கு ஒரு தாய்தான் ............















என்
கனவில் நீ வருவது வேறு
யாருக்கும்
தெரியாதது போல .............
நீ
என்னை வெறுத்ததும் வேறு
யாருக்கும்
தெரியாமல் இருந்திருந்தால்
எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்.........

உன்னிடம்
இருந்து வெளியேறும் மூச்சுக் காற்றை
சுவாசித்து
உயிர் வாழ்பவன் நான் .............அதானால் தான்
அந்த
காற்றை போல நீ என்னுள் புதைந்து கிடக்கிறாய் ...........
என்னை
உன்னிலிருந்து வெளியேற்றி விட்டாய் போலும் ..................

Monday, April 18, 2011


















உன் நண்பர்கள் உன் வாழ்க்கையில் இன்றோ
அல்லது நாளையோ உன்னை காயப்படுத்தலாம் .........
ஆனால் நீதான் முடிவு செய்ய வேண்டும் ............
உனக்கு முக்கியமானது அந்த வலியா...........
இல்லை அந்த நண்பர்களா .................

Friday, April 15, 2011






















பெருமை
கொள்ளுங்கள்!!!!!!!!!

ஒருதலையாய் காதலித்த நீங்களே

காதலுக்கும்.................

காதலிக்கப்பட்டவர்க்கும்.................

துன்பம் தராவதவ்ர்கள்............................

Tuesday, March 15, 2011


ஆம் ஆண்களை விட பெண்கள் அழகுதான் !!!!!!!!!!!!!!!!!!!!!
உண்மையை விட பொய் என்றுமே அழகுதானே ?????????????????

Tuesday, February 1, 2011




நமது மிகப்பெரிய வலி அது
நம்முடைய மரணம் அல்ல !!!!!!!!!!!!!!!!
நாம் உயிரோடு இருக்கும் போதே
நாம் நேசித்த ஒருவர்
நம்மை விட்டு பிரிந்து செல்வதே !!!!!!!!!!!!!!!!

Saturday, January 1, 2011

புலிகளை காப்பாற்றுவது இருக்கட்டும் மனிதர்களை காப்பாற்றுங்கள்




மனிதனுக்கு இந்த நிலைமை ...........................
ஆனால் விலங்கினங்களுக்கு குளிர் பானம் ....................
மனிதர்கள் அழிந்து கொண்டு வருகிறார்கள் ..........................
நான் சொல்வது மனிதாபிமானமுள்ள மனிதர்கள் .......................

ரூ.80 லட்சம் கோடியைத் தாண்டும் இந்திய ஊழல்கள்!

இறுதியில் வழக்கமாகப் பார்க்கப்படும் செய்தி கண்ணோட்டமாக இதனைப் பார்க்க முடியாது... மக்களின் வியப்பு, கோபம், விரக்தி, வெறுப்பு என மோசமான உணர்வுகள் அத்தனையையும் வென்றுவிட்ட சமாச்சாரம் இது. அதுதான் இந்திய ஊழல்கள். எதில் சர்வதேசத்துக்கு சவால் விடுகிறோமோ இல்லையோ... ஊழல்களில் உலக நாடுகள் போட்டி போட முடியாத அளவுக்கு முன்னேறி வருகிறது நாடு. கூடிய சீக்கிரம் ஊழல் தேசங்களின் பட்டியலில் ஆப்கானிஸ்தானை அடித்து வீழ்த்திவிடுவோம் என்று எதிர்ப்பார்க்கலாம்... காரணம் ஓரிரு கோடிகளிலிருந்து ஓரிரு லட்சம் கோடிகள் என ஊழலில் புரமோஷன் பெற்றிருக்கிறது இந்தியா.

இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இந்த ஆண்டு பெரிதாக பேசப்பட்டு வரும் 2 ஜி, ஆதர்ஷ், காமன்வெல்த் விளையாட்டு, ஐபிஎல், வங்கித்துறை, எல்ஐசி முறைகேடுகள் மட்டுமல்லாமல், கடந்த 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மொத்த மதிப்பு இது.

பத்திரிகைகள் / இணையங்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தரப்பட்டுள்ள மதிப்பீடுதான் இது. நிஜத்தில் இதைவிட அதிகமாகவும் இருக்கலாம் ஆனால் நிச்சயம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை!

இந்த 12 ஆண்டுகளாக நடந்த ஊழல்களில் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தின் உச்சகட்ட ஊழல் என்றால் அது 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நிகழ்ந்துள்ள முறைகேடுகளும் அதற்கு பிரதிபலனாக அதிகாரத்திலிருந்தவர்கள் அமுக்கிய பெரும் தொகையும்தான்.

இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள். இந்த விசாரணைக்கு உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டுள்ளது.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.

2010 ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல், சிஆர் பன்சாலி நிதித்துறை ஊழல் (1300 கோடி), இந்திய பங்கு வெளியீட்டு ஊழல் ரூ 1000 கோடி, அப்துல் கரீமின் முத்திரைத் தாள் மோசடி ரூ 500 கோடி, ஜார்கன்ட் மருத்துவ உபகரண மோசடி ரூ 130 கோடி, போலி சொஸைட்டிகளை உருவாக்கி செருப்பு தைக்க கடன் பெற்ற ஊழல் ரூ 1000 கோடி, தினேஷ் டால்மியாவின் பங்குச் சந்தை ஊழல் ரூ 595 கோடி, ஆர் பி ஜி குழுமத்தின் வீரேந்திர ரஸ்தோகி செய்த 43 கோடி ஊழல், யுடிஐ வங்கியின் ரூ 32 கோடி ஊழல், மரம் நடுவதன் மூலம் பெரிய லாபம் பார்க்கலாம் என்று கூறி பெரும் பணம் வசூலித்து நாமம் போட்ட உதய் கோயலின் ரூ 210 கோடி ஊழல், சஞ்சய் அகர்வாலின் ரூ 600 கோடி மோசடி... இப்படி பட்டியல் நீள்கிறது.

இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!