Saturday, October 31, 2009

மாசுபடும் மன்னார்வளைகுடா கடல் புற்கள் வளர்ச்சி பாதிப்பு


ராமநாதபுரம் : மன்னார்வளைகுடா தொடர்ந்து மாசுபட்டு வருவதால், கடல்புற்கள் வளர்ச்சி பாதிக்கப்பட்டு வருகிறது. மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றிலும் மணல் பரப்பு அதிகமாக இருப்பதால், கடல்புற்கள் செழித்து காணப்படுகின்றன. இரண்டரை மீட்டர் ஆழம் வரை கடலுக்கு அடியில் வாழும் செடி வகைகளில், இவை முக்கியமான தாகும். கடலில் உயிர்சத்துகள் அதிகரிக்க இவை, பெரிதும் உதவுகின்றன.

அரிய வகை ஆவுலியா கடல் ஆமைகளுக்கும் உணவாக இருப்பதால், மன்னார் வளைகுடாவில் கடல் புற்கள் அவசியமாகிறது. இறால், கணவாய் மீன்களின் உற்பத்திக்கு கடல்புற்கள் உறைவிடமாக உள்ளன. கடல்புற்கள் நிறைந்த சூழலையே கடல்குதிரை மற்றும் கடல் தாமரைகள் விரும்புகின்றன. பெரும்பாலான கடல் வாழ் உயிரினங்கள் கடல்புற்களை நாடி வசித்து வரும் நிலையில், அவற்றின் வளர்ச்சி தற்போது பாதிக்கப்பட்டு வருகிறது.


கடலில் கலக்கும் கழிவுநீர், வெடிவெடித்து மீன்பிடிப்பு போன்றவை கடல் புற்களின் வளர்ச்சியை அழித்து வருகின்றன. இதனால், மன்னார் வளைகுடாவில் 100 கி.மீ., பரப்பளவில் இருந்த கடல் புற்கள் குறைந்து வருகின்றன. கடல் மாசுபடுவதை தடுத்து, கடல் புற்கள் வளர்ச்சிக்கு உதவ மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பாக அறக்கட்டளை முன்வர வேண்டும்.

No comments:

Post a Comment