Tuesday, December 11, 2012

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 12.12.12=36! ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்!!



12.12.12-Rajinikanth Birthday Special சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்களுக்கு 12.12.12 ஒரு சூப்பர் நாள். 1000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் அபூர்வ நாள் என்பதால் மட்டுமல்ல, தமிழ் சினிமாவில் அபூர்வ ராகமாக ஒலித்த ரஜினியின் பிறந்த நாள். 12.12.12 என்பதை கூட்டினால் 36. சூப்பர் ஸ்டார் திரைப்படத்துக்கு வந்து 36 ஆண்டுகளை கடந்து விட்டார். 36ஐ அப்படியே திருப்பிப் போட்டால் 63 அதுதான் அவருக்கு வயது. அதுமட்டுமல்ல மரணத்தின் வாயிலை எட்டிப்பார்த்துவிட்டு அதை எட்டி உதைத்துவிட்டு திரும்பியிருக்கும் சூப்பர் ஸ்டார் மறுபிறவிக்கு இது முதல் பிறந்த நாள். இப்படி பல சிறப்பு அம்சங்களுடன் பிறக்கிறது 12.12.12. சூப்பர் ஸ்டாரின் சினிமா பயணம் 1975ல் தொடங்கியது. அன்று முதல் இன்று வரையிலான அவரது சினிமா பாதையில் கற்களும், முற்களும் நிறைந்திருந்தது. பூக்களும் கொட்டிக் கிடந்தது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 36-ஐ தினமலர் இணையதள வாசகர்களுக்குத் தருகிறோம்...

1. ரஜினி நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள். அதில் அவர் பேசிய முதல் வசனம் "பைரவி வீடு இதுதானே..."என்பது தான்.  நடித்த காட்சிகள் 6.

2. ரஜினி சிகரெட் ஸ்டைல் மிகவும் புகழ்பெற்றது. அது அறிமுகமான படம் மூன்று முடிச்சு.

3. வில்லனாக நடித்துக் கொண்டிருந்த ரஜினி ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதில்தான் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வழங்கப்பட்டது. வழங்கியவர் கலைப்புலி எஸ்.தாணு. நான் போட்ட சவால் படத்தின் டைட்டில் கார்டில்தான் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் போடப்பட்டது.

4. ரஜினி பேசிய முதல் பன்ஞ் டயலாக் "இது எப்படி இருக்கு?: படம் 16 வயதினிலே. இந்த வசனத்தையே "ஹவ் இஸ் இட்?" என்று ஆங்கிலத்திலும், "இப்புடு சூடு" என்று தெலுங்கிலும் பின்னாளில் பேசினார். இந்த பன்ஞ் டயலாக்கை தலைப்பாக வைத்து ஒரு படமும் வெளிவந்தது.

5. மூன்று முடிச்சு தொடங்கி எந்திரன் வரை பல படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் கொடூர வில்லனாக நடித்தது ஆடுபுலி ஆட்டம் படத்தில்தான். வில்லத்தனங்களை செய்து விட்டு "இது ரஜினி ஸ்டைல்" என்பார்.

6. ரஜினி நடித்த முதல் திகில் படம் ஆயிரம் ஜென்மங்கள். நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்த படம் சந்திரமுகி.

7. ரஜினி நடிக்க மறுத்த படம் "நீயா?" ஸ்ரீப்ரியாவின் சொந்தப் படத்தில் அவர் ரஜினியை நடிக்க கேட்டபோது நான்கைந்து ஹீரோக்களுடன் நடிக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார். பின்னர் அந்த கேரக்டரில் நடித்தவர் கமல்.

8. பிராமண லாங்குவேஜ் பேசி நடித்த படம் சதுரங்கம், சென்னைத் தமிழ் பேசி நடித்த படம் தப்புத் தாளங்கள்.

9. வணக்கத்துக்குரிய காதலியே ரஜினியின் முதல் தோல்விப் படம்.

10. ரஜினிக்கு பிடித்த படம் "முள்ளும் மலரும்". பிடித்த இயக்குனர் "மகேந்திரன்". பிடித்த நடிகர் "கமல், பிடித்த நடிகை "ஷோபா.

11. சிவாஜியுடன் நடித்த முதல் படம் "ஜஸ்டிஸ் கோபிநாத்". இதில் அவர் சிவாஜியின் வளர்ப்பு மகனாக நடித்தார். பிற்காலத்தில் சொந்த மகன் போல் சிவாஜியால் பார்க்கப்பட்டார். அவருடன் நடித்த கடைசிப் படம் "படையப்பா".

12. முதல் பேண்டசி படம் "அலாவுதீனும் அற்புத விளக்கும்". இதில் கமல் அலாவுதீனாக நடித்தார். ஒரிஜினல் கதையில் இல்லாத கமருதீன் என்ற கேரக்டர் ரஜினிக்காக உருவாக்கப்பட்டது.

13. முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடித்த படம் "பில்லா". மூன்று வேடங்களில் நடித்த படம் "மூன்று முகம்".

14. குறுகிய காலத்தில் நடித்த படம் "அன்புள்ள ரஜினிகாந்த்". 6 நாட்களில் நடித்துக் கொடுத்தார். 9 நாட்களில் நடித்த படம் "மாங்குடி மைனர்".

15. மேனியாக் டிப்ரெசிங் நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமான பிறகு நடித்த படம் "தர்மயுத்தம்". அந்தப் படத்திலும் அந்த நோயால் பாதிக்கப்பட்டவராகவே நடித்தார்.

16. முதல் சினிமாஸ்கோப்  படம் "பொல்லாதவன்". முதல் 70எம்எம் படம் "மாவீரன்". முதல் 3டி படம் "சிவாஜி". முதல் அனிமேஷன் படம் "கோச்சடையான்".

17. ரஜினி தயாரித்த முதல் படம் "மாவீரன்". திரைக்கதை வசனம் எழுதிய படம் "வள்ளி". பாடல் பாடிய படம் "மன்னன்".

18. எம்.ஜி.ஆரின் போஸ்ட்டரை பார்த்து வீரம் வந்து சண்டை போடுபவராக, அவரது ரசிகராக நடிக்க மறுத்தார். இன்னொருவர் புகழில் குளிர்காயக்கூடாது என்பது அவரது கருத்து.

19. "பாண்டியன்", "அருணாசலம்" படங்கள் தன் நண்பர்களுக்காக ரஜினி நடித்துக் கொடுத்த படம்.

20. ரஜினியின் அதிக படங்களை இயக்கியவர் எஸ்.பி.முத்துராமன். அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் ஸ்ரீப்ரியா. அதிக படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் பஞ்சு அருணாசலம்.

21. ரஜினியின் 50வது படம் "ரங்கா". 100வது படம் "ஸ்ரீராகவேந்திரர்". ரங்கா படத்தில் ரஜினியின் அக்காவாக ஜெயலலிதா நடிப்பதாக இருந்தது. எம்.ஜி.ஆர் அவரை அரசியலுக்கு அழைத்துச் சென்றதால் நடிக்கவில்லை. ஸ்ரீராகவேந்திரர் படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்க மறுத்தார். பின்னர் ரஜினியின் அன்புக்காக இயக்கினார்.

22. எம்.ஜி.ஆர் நடிக்க இருந்த படம் "ராணுவ வீரன்". அவர் முதல்வரானாதல் நடிக்க முடியாமல் போக அந்தக் கதையில் ரஜினி நடித்தார்.

23. ரஜினி நடித்த சில படங்களின் பெயர்கள் கடைசி நேரத்தில் மாற்றப்பட்டது. "நானே ராஜா நீயே மந்திரி" என்ற டைட்டில் "தம்பிக்கு எந்த ஊரு" என்று மாறியது. "நான் காந்தி அல்ல", "நான் மகான் அல்ல" என மாறியது. "காலம் மாறிப்போச்சு" என்ற டைட்டில் "தர்மதுரை" ஆனது.

24. முதன் முதலாக ஜப்பான் மொழியில் டப் செய்யப்பட்ட இந்திய படம் "முத்து". ஜப்பானில் ரசிகர் மன்றம் தொடங்கப்பட்ட முதல் இந்திய நடிகர் ரஜினி.

25. ரஜினி எடிட் செய்த படம் "படையப்பா". படப்பிடிப்பு முடிந்து பார்த்தபோது படம் 21 ஆயிரம் அடி வந்திருந்தது. எந்தக் காட்சியையும் குறைக்க முடியவில்லை. படத்துக்கு 2 இடைவேளை விடலாமா என்று யோசித்தார்கள். தான் நடித்த காட்சிகளை வெட்டத் தயங்குகிறார்கள் என்று நினைத்த ரஜினி. தானே எடிட்டிங்கில் உட்கார்ந்து காட்சிகளை குறைத்தார். இதுபற்றி அவர் சொன்ன கருத்து "ரசிகனை ரொம்ப கொடுமைப்படுத்தக்கூடாது" என்பது.

26. அதிக நாள் ஓடிய படம் "சந்திரமுகி". அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "எந்திரன்". குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "அன்புள்ள ரஜினிகாந்த்".

27. "மூன்று முடிச்சு", "மாப்பிள்ளை", "மன்னன்", "படையப்பா" படங்களில் ரஜினியோடு மோதுபவர்கள் பெண்கள்.

28. "முள்ளும் மலரும்", "மூன்று முகம்", "முத்து", "படையப்பா", "சந்திரமுகி", "சிவாஜி" படங்களுக்காக மாநில விருதைப் பெற்றார். பத்மஸ்ரீ, பத்மபூஷன் மத்திய அரசு வழங்கிய விருதுகள்.

29. மீசையில்லாமல் நடித்த முதல் படம் "தில்லு முல்லு", முதல் முழு நீள காமெடி படமும் அதுதான்.

30. ரஜினியின் பேவரேட் பாம்பு சீன் முதலில் இடம் பெற்றது பைரவியில் புகழ் பெற்றது அண்ணாமலையில்.

31. இளைஞன், நடுத்தர வயது குடும்பஸ்தன். தள்ளாடும் முதியவர் என்ற மூன்று கெட்அப்களில் நடித்த படம் "6லிருந்து 60 வரை". ரஜினிக்கு தேசிய விருது எதிர்பார்க்கப்பட்ட படம்.

32. கோடிக் கணக்கில் சம்பளம் தர முன்வந்தும் ரஜினி இதுவரை ஒரு விளம்பரப் படத்தில்கூட நடித்ததில்லை. நான் உபயோகிக்காத ஒரு பொருளை மற்றவர்களை உபயோகிக்கச் சொல்வது தவறு என்பது அவர் கருத்து.

33. நிஜ வாழ்க்கையில் கண்டக்டராக இருந்த ரஜினி எந்தப் படத்திலும் கண்டக்டராக நடிக்கவில்லை. "ஆறு புஷ்பங்கள்" படத்தில் விஜயகுமார் கண்டக்டராக நடிக்க ரஜினி டிரைவராக நடித்திருந்தார். பாட்ஷா படத்தில் ஒரே ஒரு பாட்டில் கண்டக்டராக வருவார்.

34. ரஜினிக்கு எதிர்பாராத வெற்றியைக் கொடுத்த படம் "முரட்டுக்காளை", "சந்திரமுகி". எதிர்பாராத தோல்வியைக் கொடுத்த படம் "ஸ்ரீராகவேந்திரர்" மற்றும் "பாபா".

35. ரஜினி நடித்த ஹாலிவுட் திரைப்படம் பிளட் ஸ்டோன். ரஜினின் பல படங்கள் தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காலி மொழிகளில் டப் செய்யப்பட்டிருக்கிறது. நேரடியாக நடித்த இந்திப் படம் 16.

36.  தமிழ் சினிமாவில் அதிகமான புத்தகங்கள் வெளிவந்திருப்பது ரஜினி பற்றித்தான். அவரது வாழ்க்கை பற்றி நிறையபேர் எழுதியிருக்கிறார்கள். ரஜினியை சுயசரிதை எழுதச் சொல்லிக் கேட்டார்கள். அதற்கு அவர் சொன்ன பதில் "சுயசரிதை எழுதும் அளவுக்கு என் வாழ்க்கை பரிசுத்தமானதல்ல. அந்த அளவுக்கு பெரிதாக சாதித்தவனும் அல்ல. நான் நடிச்சு மக்களை சந்தோஷப்படுத்துறேன். அவர்கள் பணமாக எனக்கு திருப்பித் தந்து என்னை சந்தோஷப்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்" என்பார். அதுதான் சூப்பர் ஸ்டார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரஜினி...! வாசகர்களும் தங்கள் பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கலாம்!!

Sunday, September 2, 2012

நாடு முழுவதும் 21 போலி பல்கலைக்கழகங்கள்: யுஜிசி-02-09-2012


மாணவர்கள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி அந்த 21 போலி பல்கலைக்கழகங்களின் பெயர்களையும் யுஜிசி வெளியிட்டுள்ளது. இந்தப் பல்கலைக்கழகங்கள், மாணவர்களுக்கு பட்டமளிக்க தகுதியற்றவை என்றும் யுஜிசி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.புதுடெல்லி: நாடு முழுவதும் 9 மாநிலங்களில் 21 கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்துள்ளது.

யுஜிசி வெளியிட்டுள்ள 21 போலி பல்கலைக்கழகங்கள் பட்டியல்:
பீகார்:
1. Maithili University/Vishwavidyalaya, Darbhanga, Bihar
டெல்லி:2. Varanaseya Sanskrit Vishwavidyalaya, Varanasi (UP)/Jagatpuri, Delhi
3. Commercial University Ltd., Daryaganj, Delhi
4. United Nations University, Delhi
5. Vocational University, Delhi
6. ADR- Centric Juridical University, ADR House, New Delhi
7. Indian Institute of Science and Engineering, New Delhi
கர்நாடகா:
8. Badaganvi Sarkar World Open University Education Society, Gokak, Belgaum
கேரளா:
9. St. John&'s University, Koshanattam, Kerala
மத்திய பிரதேசம்:
10. Keserwani Vidyapith, Jabalpur, Madya pradesh
மகாராஷ்டிரா:11. Raja Arabic University, Nagpur
தமிழகம்:12. DDB Sanskrit University, Putur, Trichi, Tamil Nadu
மேற்குவங்கம்:
13. Indian Institute of Alternative Medicine, Kolkatta
உத்தரப்பிரதேசம்:
14. Mahila Gram Vidyapith/ Vishwavidyalaya, (Women&'s University) Prayag, Allahabad (UP)
15. Gandhi Hindi Vidyapith, Prayag, Allahabad (UP)
16. National University of Electro Complex Homeopathy, Kanpur
17. Netaji Subash Chandra Bose University (Open University), Achaltal, Aligarh
18. Uttar Pradesh Vishwavidyalaya, Kosi Kalan, Mathura (UP)
19. Maharana Partap Shiksha Niketan Vishwavidyalaya, Pratapgarh (UP)
20. Indraprastha Shiksha Parishad, Institutional Area, Noida Phase -II
21. Gurukul Vishwavidyalaya, Vrindavan, Mathura (UP)
நாடு வெளங்கிடும்............................

Wednesday, August 8, 2012

என்னய்யா ஆச்சு உங்களுக்கெல்லாம்?


லண்டன்: 5 மேட்ச், அஞ்சும் போச்சு, அனைத்திலும் தோல்வி. என்னாச்சு இந்தியாவுக்கு என்று பதறிப் போய் நிற்கின்றனர் இந்திய ஹாக்கி வீரர்கள்.
ரொம்பக் கேவலமான தோல்விகளைப் பெற்று இந்திய ஹாக்கி ரசிகர்களின் நெஞ்சில் வேலைப் பாய்ச்சியுள்ளனர் இந்திய ஹாக்கி அணியினர். ஒரு காலத்தில் உலகையே அதிர வைக்கும் அதிரடி வெற்றிகளைத் தொடர்ந்து குவித்து வந்த இந்திய ஹாக்கி அணி இன்று கண்டுள்ள தொடர் தோல்வி பெரும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

மொத்தம் 8 முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்று சாதனை படைத்த அணி இந்தியா. அசைக்க முடியாத சாம்பியனாக ஒலிம்பிக்கில் ஒத்தை ஆளாக கலக்கி வந்த இந்திய ஹாக்கி அணி லண்டன் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்ட ஐந்து போட்டிகளிலும் மகா மோசமான தோல்விகளைச் சந்தித்துள்ளது.
நம்ம வீரர்களுக்கு அடிப்படையே தெரியவில்லை. பிறகு எப்படி இவர்களிடமிருந்து நாம் வெற்றியை எதிர்பார்க்க முடியும் என்று பெரும் வேதனையுடன் கூறுகிறார் முன்னாள் கேப்டன் ஜபர் இக்பால்.
இந்திய ஹாக்கி அணியின் ஒலிம்பிக் வரலாறு சாமானியமானதா... மகா பெரிய சரித்திரம் அது. 1928ம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாதான் அசைக்க முடியாத சாம்பியனாக திகழ்ந்து வந்தது. இந்தியா பெற்று வந்த ஒரே தங்கத்தை பெற்றுக் கொடுத்தது ஹாக்கி அணி மட்டுமே.

இடையில் 1960ல் தங்கத்தை நழுவ விட்ட இந்தியா, வெள்ளிப் பதக்கத்தைப் பெற்று முதல் சரிவை வெளிக்காட்டியது. ஆனாலும் விடாமல் 1964ல் மீண்டும் தங்கத்தைத் தட்டியது இந்தியா. ஆனால் 1968, 72 மற்றும் 76 ஆகிய ஆண்டுகள் இந்தியாவுக்கு சோதனையாக மாறியது. முதல் இரு ஆண்டுகளில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்தியா, 76ல் 7வது இடத்தைப் பெற்று அதிர வைத்தது.
ஆனால் 1980ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் வாசுதேவன் பாஸ்கரன் தலைமையிலான இந்திய அணி சிறுத்தை போல பாய்ந்து அத்தனை அணிகளையும் தவிடுபொடியாக்கி மீண்டும் தங்கத்தை வென்று இந்தியர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.
ஆனால், அதுதான் நாம் ஒலிம்பிக் ஹாக்கியில் வாங்கிய கடைசிப் பதக்கம், தங்கப் பதக்கம் என்பதுதான் வேதனையிலும் வேதனையாகும். அதன் பின்னர் 1984 முதல் தொடர்ந்து மோசமான இடத்தையேப் பெற்று வருகிறது இந்தியா.
84ல் 5வது இடம் 88ல் 6வது இடம், 99ல் 7வது இடம், 96ல் 8வது இடம், 2000மாவது ஆண்டில் 7வது இடம், 2004ல் 7வது இடம் என சுணங்கி வந்த இந்திய ஹாக்கி அணி, 2008ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெறத் தவறி பெரும் கேவலத்தை சந்தித்தது. இப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அடி மேல் அடியாக ஒரு வெற்றியைக் கூடப் பெறாமல், கிட்டத்தட்ட கடைசி இடத்தை நோக்கி தள்ளப்பட்டுள்ளது.
என்ன தவறு நமது வீரர்களிடம் என்பதுதான் புரியவில்லை. இத்தனைக்கும் வெளிநாட்டு பயிற்சியாளர், ஏகப்பட்ட வசதிகள் என சகல சவுகரியங்களோடும்தான் இந்திய ஹாக்கி அணியைப் பராமரித்து வருகின்றனர். ஆனால் நல்ல வழிகாட்டுதல் இல்லாத அணியாக நமது அணி மாறிப் போயுள்ளது. அது மட்டுமல்லாமல் ஹாக்கி சம்மேளனங்களின் சமீபத்திய பிளவுகள் சண்டைகளும் நமது அணியினரின் வளர்ச்சியை கூறு போட்டு விட்டது.
நமது நாட்டிலேயே அனுபவம் வாய்ந்த எத்தனையோ பேர் உள்ளனர். ஜபர் இக்பால் சொன்னது போல நாம் அடிப்படையை மறந்ததுதான் இந்த தொடர் கேவலத்திற்குக் காரணம். பாஸ்கரன், தன்ராஜ் பிள்ளை, அஜீத் பால் சிங் என முன்னோடிகள் வசம் நமது வீரர்களை ஒப்படைக்க வேண்டும். அதி தீவிர பயிற்சி அளிக்க வேண்டும். வெறியுடன் விளையாட வேண்டும். தங்கம் மட்டுமே நமது கண்ணில் தென்பட வேண்டும், இடையில், சிங்கமே வந்து நின்றாலும் கூட சற்றும் மனம் தளராமல் ஆட வேண்டும். அப்போதுதான் மீண்டும் நமது பெருமையை நாம் மீட்டெடுக்க முடியம்...


Thanks to -thatstamil.com

Monday, June 25, 2012

கேப்டன் கபில்தேவ் தலைமையில் உலகக் கோப்பையை வென்று இன்றுடன் 29 வருஷமாச்சு!



பெங்களூர்: இந்தியாவுக்கு முதல் முறையாக கிரிக்கெட்டில் பெருமை சேர்ந்த தினம் இது. இதே நாளில், 1983ம் ஆண்டுதான் முதல் முறையாக 'ஹரியானா சிங்கம்' கபில்தேவ் தலைமையில் இந்திய கிரிக்கெட் அணி, மேற்கு இந்திய 'மகா சிங்கம்' மேற்கு இந்தியத் தீவுகளை நையப்புடைத்து உலகக் கோப்பையை வென்று வந்த தினம்.
யாருமே எதிர்பார்த்திராத ஒரு வெற்றி அது... ஆனால் கபில்தேவும், அவருடைய சில சகாக்களும் அத்தனை பேரையும் ஏறி மிதித்து வந்து கோப்பையைக் கைப்பற்றிய போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கே அளவே இல்லை... இப்போது நினைத்தாலும் புல்லரிக்க வைக்கும் அமோகமான வெற்றி அது.
லார்ட்ஸ் மைதானமே அன்று விழாக்கோலம் பூண்டது. ஒரு பக்கம் இந்தியா சாம்பியனா என்ற அதிர்ச்சி அலைகள், மறுபக்கமோ, நம்ம இந்தியாதான் சாம்பியன் என்று மைதானத்திற்குள் வெள்ளமென பாய்ந்து வந்த இந்திய ரசிகர்களின் உற்சாகப் புயல். லார்ட்ஸ் மைதானமே அதை நினைத்து இன்று கூட ஆச்சரியப்படும்.
டேவிட்டுககும், கோலியாத்துக்கும் இடையிலான சண்டை என்றுதான் இந்தியா, மேற்கு இந்தியத் தீவுகள் அணி இடையிலான அந்த உலகக் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியை வர்ணித்தார்கள். காரணம், அப்போது இந்தியா கிரிக்கெட்டில் ஒரு சுண்டெலியாகத்தான் இருந்தது. ஆனால் மேற்கு இந்தியத் தீவுகளோ அசைக்க முடியாத மகா சிங்கமாக வீற்றிருந்தது. ஆனால் கபில்தேவ் தனது அபாரமான புத்திசாதுரியத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை சாய்த்து அனைவரையும் அதிர வைத்தனர் கபில்தேவும், அவருடைய சகாக்களும்.


அது 3வது உலகக் கோப்பையாகும். முதல் இரு கோப்பைகளையும் மேற்கு இந்தியத் தீவுகள் வென்றிருந்ததால், 3வது முறையும் அதுவே சாம்பியனாகும் என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர். 3வது உலகக் கோப்பைக்கு புரூடென்ஷியல் கோப்பை என பெயரிட்டிருந்தனர்.
1983ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி சனிக்கிழமை நடந்த அந்தப் போட்டியின் முடிவைக் காண ஒட்டுமொத்த இந்தியாவும் ஆவலுடன் காத்திருந்தது.
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி தனது அட்டகாசமான ஆட்டத்தால் மேற்கு இந்தியத் தீவுகளை வீழ்த்திய அந்த தருணம் ஒட்டுமொத்த இந்தியாவும், குதூகலித்தது.
இறுதிப் போட்டியின் சில துளிகள்...
இங்கிலாந்தில் நடந்த 3வது உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம்8 அணிகள் கலந்து கொண்டன. 27 போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு அணியும் 60 ஓவர்கள் ஆட வேண்டும். நீளமான போட்டிதான்.
இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. மேற்கு இந்தியத் தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட் டாஸ் வென்று இந்தியாவை பேட் செய்யப் பணித்தார். அவரது கணிப்பு சரியாகவே இருந்தது. மேற்கு இந்தியத் தீவுகளின் தீப்பொறி பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 54.4 ஓவர்களில் 183 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா.
இந்தியத் தரப்பில் முதல் ஆளாக அவுட்டானவர் சுனில் கவாஸ்கர். வெறும் 2 ரன்களை மட்டுமே அவர் எடுத்தார். ஆண்டி ராபர்ட்ஸ், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல், மைக்கேல் ஹோல்டிங் என மேற்கு இந்தியத் தீவுகளின் ஜாம்பவான் பந்து வீச்சாளர்கள் இந்திய பேட்டிங்கை நசுக்கி பிதுக்கி விட்டனர்.
ஸ்ரீகாந்த் சேர்த்த 38
இந்தியத் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரீகாந்த் மட்டும் 38 ரன்களைச் சேர்த்திருந்தார். அவ்வளவுதான் இந்தியா, எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்றுதான் அத்தனை பேரும் நினைத்திருந்தனர்.
பலே பலே சந்து
ஆனால் நடந்தது வேறு..இந்தியாவின் பந்து வீச்சை மிக அழகாக திட்டமிட்டு பயன்படுத்தினார் கபில் தேவ். பல்வீந்தர் சிங் சந்து ரூபத்தில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு சனி வந்து சேர்ந்தது. அபாயகரமான ஓபனரான கார்டன் கிரீனிட்ஜை சந்து அவுட்டாக்கிய விதம் இன்று நினைத்தும் வியப்பைத் தரும்.
ஒரே ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் கார்டன். அதன் பிறகுதான் இந்தியாவுக்கே நம்பிக்கை வந்தது. அதேபோல வி்வ் ரிச்சர்ட்ஸ் அடித்த பந்தை பின்னோக்கி நகர்ந்து கபில் தேவ் கேட்ச் செய்த விதம் அத்தனை பேரையும் அசரடி்ததது.
படு வேகமாக ஆடிக் கொண்டிருந்த ரிச்சர்ட்ஸ் இப்படி அவுட்டாகிப் போனதால் இந்தியாவுக்கு மேலும் நம்பிக்கை அதிகரித்தது.
மொஹீந்தரின் 'மோகினியாட்டம்'
அதன் பிறகு வந்து சேர்ந்தது மொஹீந்தர் அமர்நாத்தின் 'மோகினியாட்டம்'. அபாரமாக பந்து வீசிய அவர், மேற்கு இந்தியத் தீவுகள் வீரர்களை நிலை குலைய வைத்தார். 3 முக்கிய விக்கெட்களை அவர் வீழ்த்தியதால் இந்தியாவின் கை ஓங்கியது, 'கப்'பும் கச்சிதமாக வந்து சேர்ந்தது. இறுதியில் ஆட்ட நாயகன் அவரே. வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்தார் அமர்நாத் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபக்கம் மதன்லாலும் தன் பங்குக்கு 3 விக்கெட்களைத் தூக்க மேற்கு இந்தியத் தீவுகள் அணி சரணடைந்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று தனது முதல் உலகக் கோப்பையை கையில் ஏந்தியது.
இப்படி கபில் தேவ் தலைமையில் இந்தியா தனது முதல் உலகக் கோப்பையை வென்ற தினம் அது. அதன் பிறகு இன்னொரு கோப்பையைப் பெற இந்தியா 28 வருடங்கள் காக்க வேண்டியதாகப் போயிற்று.
நிச்சயம் இந்திய ரசிகர்களுக்கு இது பொன்னாள் - கபில் தேவ் போன்ற ஜாம்பவான்களைப் பற்றி கொஞ்சமாச்சும் நினைத்துப் பார்க்க வேண்டிய நன்னாள்...!

Wednesday, June 13, 2012

தேசிய மாணவர் படை (N.C.C)




தேசிய மாணவர் படை என்று ஒன்று இந்தியாவில் இருப்பது பலருக்கு தெரியுமா என்று எனக்கு தெரியவில்லை........ஆனால் நான் பார்த்த வரை அதில் இருந்தவர்களை தவிர மற்றவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.............. இந்த வலைப்பக்கத்தில் என். சி. சி (National Cadet Corps) யை பற்றியும் என்.சி.சி எப்படி செயல் படுகிறது என்பதை பற்றியும், என்.சி.சி மாணவர்கள் எப்படி தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்படுகிறார்கள் என்பதை, எனக்கு தெரிந்த அளவில் பதிக்க நினைக்கிறேன், ஏனெனில் என்.சி.சி யை மிகவும் நேசித்து அதிலே வாழ்ந்து காலத்தின் கட்டாயத்தால் அதை துறந்து இன்றும் அதைப்பற்றி நினைத்து பெறுமை படுபவன். இன்றளவும் எனக்கு என்.சி.சி அல்லாத நண்பர்கள் ஒரு சிலரே, இதில் நண்பர்கள் பற்றி குறிப்பிடுவதற்க்கு காரணம், என்னவோ தெரியவில்லை, என்.சி.சி யியில் இருக்கும் நண்பர்களது எண்ணங்கள் கிட்ட்த்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும்.....(இங்கு நான் குறிப்பிட்டது நான் பார்த்த நண்பர்களை மட்டுமே).............. ரம்பம் போட்டது போதும் விசயத்துக்கு வாடா டேய்!!!!!! அப்படிங்கரீங்களா வந்துட்டேன்.......  

இந்தியாவின் பட்ஜெட்டில் அதிகமாக நிதி ஒதுக்கப்படுவது இந்திய அரசின் பாதுகாப்பிற்க்காக தான் (இராணுவம்). இதற்கு அடுத்தாற் போல் ஒதுக்கப்படுவது பெட்ரோல் இறக்குமதிக்கு. பெட்ரோலை பற்றி நாம் பேச தேவையில்லை, ஏனெனில் காங்கிரஸ் கட்சி அதை கவனித்துக்கொள்ளும். இந்திய பாதுகாப்பிற்க்கு  ஒதுக்கப்படும் நிதியில் ஒரு பாதி இராணுவத்திற்க்கும் மீதி சரி பாதி எதிர் கால இராணுவ வீர்ர்களை உருவாக்குவதற்க்கும் செலவளிக்கப்படுகிறது. இராணுவம் என்றாலே பலருக்கு நினைவுக்கு வருவது துப்பாக்கி!!!!! (ஒரு சிலருக்கு வேறு ஒன்று வரும்). எதிர்கால இராணுவ வீர்ர்களை உருவாக்குவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது தேசிய மாணவர் படை (என். சி. சி). இந்தியாவில் உள்ள (Andhra Pradesh, Andaman and Nicobar Islands, Arunachal Pradesh, Assam, Bihar, Chhattisgarh, Dadar and Nagar Haveli, Daman and Diu, Delhi, Goa, Gujarat, Haryana, Himachal Pradesh, Jammu & Kashmir, Jharkhand, Karnataka, Kerala, Lakshadeep, Madhya Pradesh, Maharashtra, Manipur, Meghalaya, Mizoram, Nagaland, Orissa, Pondicherry, Punjab, Rajasthan, Sikkim, Tamil Nadu, Tripura, Uttarakhand, Uttar Pradesh, West Bengal) மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்த்து உள்ள 35-ஐ என்.சி.சி-காக 17 Directorate-ஆக சேர்த்து அமைக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தில் இருப்பது போல் பதவி, ரேங்க், என்.சி.சி-யிலும் உள்ளது. அதைப்பற்றி விரிவாக அடுத்தப்பதிவில் பார்ப்போம். இப்பதிவில் ஏதெனும் பிழை இருந்தால் பின்னூட்ட்த்தில் தெரிவிக்கவும்.

Thursday, May 10, 2012

உன்னை விட அழகான
ஒரு பென்னை கண்டால்
உன்னை மறந்து விடுவேன் என்றிருந்தேன்......
ஏனோ எந்த ஒரு பெண்ணும்
எனக்கு அழ்காய் தெரிவதில்லை.......பிரச்சினை
என் கண்ணிலா!!!!!!!! இல்ல உன் அழகிலா!!!!!!!!!

Wednesday, May 2, 2012

பிரிவு

மரணத்தால் பிரியும் சோகத்தைவிட 
நாம் விரும்பும் ஒருவர் நமக்காக 
எங்கோ காத்திருக்கிறார் என்று தெரிந்தும் 
அவர்களை பார்க்க முடியாமல் 
 வரும் சோகம் மிகவும் கொடியது

Thursday, April 19, 2012

நண்பர்கள் எல்லாம் நல்லவர்கள் இல்லை............
எதிரிகள் எல்லாம் கெட்டவர்கள் இல்லை .............

Wednesday, March 7, 2012

கர்வம்

அரசனின் கர்வம் அதிகாரத்திலும்
கவிஞனின் கர்வம் சொல் நடையிலும்

உழவனின் கர்வம் அவனது உழைப்பிலும்

என்னைப் போன்ற ஏழையின் கர்வம் பிடிவாதத்திலும்
உன்னைப்போன்ற அழகியின் கர்வம் உடையிலும் தெரிகிறது.

Friday, January 27, 2012

சுவாசம்



வாசிக்கும் கவிதையையே மறக்க முடியாத நான்
சுவாசிக்கும் உன்னை நான் எப்படி மறப்பேன்