Tuesday, February 16, 2010

இதுவும் ஒரு காதல் கதை


என்னாச்சு, என்ன சொன்னார், உன்னை பொண்ணு பார்க்க வந்தவர்?
வந்தாரு, பார்த்தாரு, போயிட்டாரு,
அவரோட பேசினியா?
ம், பேசினேன், அரைமணிநேரம்,
என்ன சொன்னார்?
அவரைப்பத்தி சொன்னாரு, என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது, என்னென்ன பழக்கம் உண்டு, எல்லாம் சொன்னாரு,
உன்னைப் பத்தி என்ன சொன்னார்?
ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாரு,
நீ என்ன சொன்னாய்?
நானும் பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டேன்,
என்னது, பிடிச்சிருக்குன்னு சொன்னியா?
ஆமாம்,
சொல்றதுக்கு முன்னாடி, என் முகம் உனக்கு ஞாபகம் வரலையா?
வந்தது, ஆனா, அதுக்கும் முன்னாடி, எங்க அப்பாவோட முகம் ஞாபகம் வந்தது, அதனால் தான்,
கொஞ்சம் கூட நினைவில்லையா, எத்தனை நாள், எத்தனை போன் கால், எத்தனை மெசேஜ், எவ்வளவு மணி நேரம் பேசியிருப்போம், எல்லாம் ஒரு அரை மணி நேரத்தில் முடிஞ்சு போச்சா?
புரியாம பேசாதே, நான் முதலில் இருந்தே சொல்லிக்கிட்டுருந்தேன், இது நடக்காதுன்னு, நீ தான் பேசிப் பேசி என் மனச மாத்தினாய்,
நீயும் தான் மனசை மாத்திக்கிட்ட, எத்தனை நாள் சொல்லியிருக்கே, "நான் இல்லாம உன்னால வாழவே முடியாதுன்னு",
உண்மை தான், ஆனா என் அப்பாவோட முகத்தைப் பார்த்தா, அவர்கிட்ட சொல்லி மனசை நோகடிக்கத் தோணலை,
நிஜமாதான் சொல்றியா? இது தான் உன் முடிவா?
ஆமாம், நல்ல யோசிச்சிட்டுத்தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்,
சரி, அப்புறம் உன் இஷ்டம், போறதுக்கு முன்னாடி ஒண்ணே ஒண்ணு குடுத்துட்டு போ,
என்ன வேணும் உனக்கு? என்னைத் தவிர எது வேணும்னாலும் கேளு,
கவலைப்படாதே, உன்னையெல்லாம் கேட்கமாட்டேன்,
அப்புறம்,
ஒவ்வொரு நாளும் குறைஞ்சது, ரெண்டு மணி நேரமாவது, போன்ல பேசியிருப்போம், ஏதோ என் கம்பெனி சியூஜில வாங்கின கனெக்க்ஷன்கிறதால பில்லு எகிறாம இருந்தது, ஏற்கனவே மூணு நம்பர் என் பேர்ல வாங்கிட்டேன், வேற கிடைக்காது, அதுனால அந்த சிம்கார்டை மட்டும் கழட்டிக் குடுத்துட்டு போ, அடுத்து வருபவளுக்குகொடுக்கணும்.



பின்குறிப்பு
இதைக் கவிதையாக எழுதவே எண்ணியிருந்தேன், சரியான வார்த்தைகள் என்னிடம் சிக்காததால், நீங்கள் தப்பிவிட்டீர்கள், கவிஞர்கள் யாராவது இதனை கவிதையாக்க முயற்சிக்கலாம் (இங்கோ அல்லது உங்கள் பதிவிலோ).

No comments:

Post a Comment